நாங்கள் ஆதரவு தெரிவிக்கும் ஜனாதிபதி வேட்பாளரே கடந்த காலங்களில் வெற்றி பெற்றுள்ளார்
இடம் பெற்றிருந்தும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரையும் கைது செய்யவுமில்லை அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும் இல்லை ஆ
னால் இந்த அரசியல் அப்படியான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுகிறது. இந்த நல்லாட்சி அரசாங்கமானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து அவர்களோடு இன்னோரன்ன பல சிறுபான்மை கட்சிகளும் இணைந்து அமைத்த ஒன்றாகும். கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தில் சிறுபான்மை இனம் நிம்மதியாக வாழ்ந்தது.
கடந்த 2000 ஆம் ஆண்டு நாங்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களையும் 2004 ஆம் 5 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சியின் தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து இருந்தோம். நாங்கள் கடந்த காலங்களில் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்தோமோ அவர்கள் எல்லோரும் வெற்றியடைந்து ஜனாதிபதியாக ஆசனத்தில் அமர்ந்து இருக்கின்றார்கள் அதேபோன்று இம்முறை 2019ஆம் ஆண்டு இடம்பெறுகின்ற தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாச அவர்களை நாங்கள் ஆதரிக்கின்றோம் நிச்சயமாக அவர் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவாகி ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின்போதுதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உடைய தலைவராகிய எனக்கும் மேடையில் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் ஒதுக்கி தரப்பட்டு இருந்தது ஆனால் நாங்கள் தான் பேசாமல் தவிர்ந்து கொண்டோம் அவற்றை ஊடகங்கள் ஒருவகையாக பிரச்சாரம் செய்து அதை வேறு திசைக்கு கொண்டு சென்று இருக்கின்றார்கள்.
நாங்கள் இவற்றை எல்லாம் எங்களுடைய தேவையாக பேச வேண்டுமென்று இருந்தோமோ அவற்றையெல்லாம் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்கள் செய்து தருவதாக மேடைகளில் பேசுகின்ற போது நாங்கள் ஏன் அவர்களிடம் இது சம்பந்தமாக பேச வேண்டும்.கடந்த காலங்களில் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் தான் பேசி அவர்களுக்கான நஷ்டம் வீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் அதேபோன்று இந்த அரசில் இன்னோரன்ன பல சலுகைகளையும் எங்களுடைய மக்களுக்கு நாங்கள் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.
நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்க முடியாமல் தடுத்தது அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ எல் எம் அதாவுல்லா அவர்களே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் சிறந்த உறவை வைத்து கொண்டு அவர்களுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் ஜனாதிபதி அவர்களை தொடர்பு கொண்டு 500 வீடுகளைக் கொண்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை கையளிக்க விடாமல் தடுத்தது மட்டுமில்லாது எனக்கும் பகிரங்க கடிதம் ஒன்றையும் எழுதினார். பல ஏழை மக்கள் வீடில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது அவர் இவ்வாறு செய்தது மிக மோசமான செயலாகும் என குற்றம் சுமத்தினார்.
















