பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் நேர்காணலில் சந்தித்து பேசிவருகிறார்கள். இதில் தற்போது பேசியுள்ள அபிராமி பிக்பாஸ் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
முகேன் காதல்
அதில், முகேனின் மீதுள்ள காதலை பற்றி பேசியுள்ள அபிராமி, உண்மையா ஒருத்தர் மேல அன்பு, காதல், பாசம் வைச்ச அவங்க சந்தோஷமா இருக்கணும் தான் நினைப்போம் நானும் அதைத்தான் செஞ்சேன் என கூறியுள்ளார். மேலும், முகேன்
நதியா காதலை ஏற்றுக்கொண்டதற்கு அவன் சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம், அவன் நினைச்சது எல்லாமே கிடைக்கணும், நடக்கணும், அவன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் என கூறியுள்ளார்.
கவின் சாண்டி தர்ஷன்
கவின் சாண்டி நட்பை பற்றி பேசியுள்ள அபிராமி, அவங்க நட்பை பார்த்து நான் ஆச்சர்யபடறேன். எப்படி இப்படி இருக்க முடியும் என்று என கூறி, தர்ஷனையும் புகழ்ந்துள்ளார். நண்பனா அவனா மாறி ஒரு நண்பன் எனக்கு கிடைக்கமாட்டான். எனக்கு கிடைச்ச வரம்.
கவின்- லொஸ்லியா காதல் பற்றி
கவின் லொஸ்லியா பற்றி, அக்காவுக்கே பயங்கரமான ஒரு சப்போர்ட் தேவைப்படுது. இப்போதைக்கு தங்கச்சி லொஸ்லியா அக்காவோட கதையை தான் கேட்டுருக்கு. ஒரு மாதம் டைம் எடுத்து பேசினாதான் தெரியும். என கூறியுள்ளார்.
மதுமிதா சரவணன்
நாங்க பேசினோம் அவரு நல்லதான் பேசினாரு. அவரு வீட்டு குலதெய்வம் பங்ஷனுக்கு எங்க எல்லோரையும் அழைத்துள்ளார்.

மதுமிதாவை தொடர்பு கொள்ளமுடியவில்லை, வேற எதுவும் சொல்ல தெரியலை என மழுப்பி பேசியுள்ளார்












