இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, புனே டெஸ்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே நடந்த தென் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், அந்த அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, டெஸ்டில் தனது 26வது சதத்தை விளாசியுள்ளார். இதன்மூலம் அவர் புதிய
சாதனை படைத்துள்ளார்.
அதாவது சர்வதேச போட்டிகளில் 40 சதங்கள் அடித்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற பிரம்மாண்ட சாதனையை கோஹ்லி செய்துள்ளார். அத்துடன் சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்த 2வது அணித்தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டு அவரது முதல் டெஸ்ட் சதம் இதுதான்.
இந்திய அணியின் முன்னாள் தலைவர்களான கங்குலி, டோனி கூட இந்த சாதனை செய்யவில்லை. ஆனால், கோஹ்லி 30 வயதிலேயே இச்சாதனையை எட்டியுள்ளார்.
அவர் இதுவரை டெஸ்டில் 26 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 43 சதங்கள் என 69 சதங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.














