2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள் அறிவிப்பு
By Velmurugan P | Updated: Thursday, October 10, 2019, 18:31

இலக்கியத்திற்கான, 2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு போலந்து நாட்டின் எழுத்தாளர் ஓல்கா டோகார்சுக்கு வழங்கப்படுவதாகவும். 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கேவிற்கு வழங்கப்படுவதாகவும் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளின் கீழ் ஆல்ஃபிரட் நோபலின் உயில்படி வழங்கப்படுகிறது. அத்துடன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 1968ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. Sponsored Banana Island in Lagos is a Billionaire’s Paradise Mansion Global Sponsored Getting a Job in the UK May be Easier Than You Think UK Jobs | Sponsored Listings இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு கடந்த சில நாட்களாக ஸ்வீடனில் உள்ள நோபல் கமிட்டி அறிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து நாட்டின் எழுத்தாளர் ஓல்கா டோகார்சுக்கு வழங்கப்படுவதாகவும். 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கேவிற்கு வழங்கப்படுவதாகவும் நோபல் கமிட்டி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
BREAKING NEWS:
The Nobel Prize in Literature for 2018 is awarded to the Polish author Olga Tokarczuk. The Nobel Prize in Literature for 2019 is awarded to the Austrian author Peter Handke.#NobelPrize pic.twitter.com/CeKNz1oTSB— The Nobel Prize (@NobelPrize) October 10, 2019












